பிச்சைக்காரன் பள்ளம் ஓடையை தூர்வார திட்டம்

பிச்சைக்காரன் பள்ளம் ஓடையை தூர்வார 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி தெரிவித்து உள்ளார்

Update: 2023-12-16 11:46 GMT

மாநகராட்சி ஆணையர் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது , ஈரோடு மாநகராட்சி பகுதியில் இரண்டு ஓடை உள்ளதில் , பெருபள்ளம் ஓடை தூர்வாரப்பட்டுள்ளதாகவும் ,மற்றொரு ஓடையான பிச்சைக்காரன் பள்ளம் ஓடை தூர்வார 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி ,அரசிடம் இருந்து நிதி பெற்றவுடன் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மா

நகராட்சி பகுதியில் சாய கழிவு நீர் பிரச்சினை குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஈரோடு மாநகராட்சி தெரு நாய்கள் பிடிக்க மத்திய விலங்குகள் வாரியத்தின் கீழ் பதியப்பட்ட நிறுவனங்கள் மூலம் நாய்கள் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் , அதன்படி ஈரோடு மாநகராட்சியில் தனபால் என்ற கால்நடை மருத்துவர் மூலம் நாய் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்

Tags:    

Similar News