திமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஆ.ராசா

பெரம்பலூர் மாவட்டத்தில் திமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆ.ராசா நலம் விசாரித்தார்.

Update: 2024-05-12 11:17 GMT

திமுக துணை பொது செயலாளர் அ. ராசா தனது சொந்த ஊரான பெரம்பலூர்மாவட்டம் வேலூர் கிராமத்திற்கு வருகை தந்தார் இதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் உடல்நிலை குறைகள் பாதிக்கப்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் அவரது உறவினர்கள் இல்லத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.

அதன்படி எசனை கிராமத்தில் கூடலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணியின் மாமனார் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதை அறிந்தவர் அவரது இல்லம் சென்று விசாரித்தார், அதனையடுத்து வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம் கிளைக் கழக இளைஞரணி நிர்வாகி அஜித் விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்றதை அறிந்து நேரில் சென்று விசாரித்து கவனமுடன் இருக்க வேண்டி ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து பேரளி படக்காத்து மகன் விபத்துக்குள்ளாகி பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்து நேரில் சென்று விசாரித்தார்.மேலும் வேப்பூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ராஜேந்திரன் தயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதை அறிந்து அவரது இல்லம் சென்று அவரை நேரில் சந்தித்து விசாரித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் மற்றும் மாவட்ட , ஒன்றிய, நகர, கிளைக் கழக, நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

Tags:    

Similar News