கழுத்தில் துண்டு இறுக்கி பள்ளி மாணவி சாவு
தூத்துக்குடி அருகே கழுத்தில் துண்டு இறுக்கி பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.;
Update: 2024-04-01 01:38 GMT
பள்ளி மாணவி மரணம்
தூத்துக்குடி அருகே உள்ள சூசை பாண்டியாபுரம் மாதா நகரைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவரது மகள் சிவ முகிலா (9) இவர் கூட்டாம்புளியில் உள்ள ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று விடுமுறை தினம் என்பதால், மாணவி சிவ முகிலா தனது வீட்டில் துண்டை வைத்து கழுத்தில் போட்டுவிளையாடிக் கொண்டிருந்தார். அப்போதே திடீரென துண்டு கழுத்தில் இருக்கியதில் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர் அங்கே பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது சம்பந்தமாக புதுக்கோட்டை காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.