சட்டமன்ற நாயகர் கலைஞர் என்கிற தலைப்பில் கருத்தரங்கம்
கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன;
Update: 2023-12-14 00:50 GMT
சட்டமன்ற நாயகர் கலைஞர் என்கிற தலைப்பில் கருத்தரங்கம்
கடலூர் மாவட்டத்தில் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா சட்டமன்ற நாயகர் கலைஞர் என்கிற தலைப்பில் கருத்தரங்கில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தலைவர் கலைஞர் சட்டமன்ற உரை பற்றி மாணவிகளிடம் எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். உடன் சட்டமன்ற துணை தலைவர் கு. பிச்சாண்டி, தொழிலாளர் நலன் துறை அமைச்சர் கணேசன், சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகர், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இள. புகழேந்தி, கடலூர் மாநகர மேயர் சுந்தரி ராஜா, கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், கடலூர் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கருத்தரங்கில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசினை வழங்கினார்.