அரசு டெப்போவில் டிரைவரை கடித்த பாம்பு

தம்மம்பட்டியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பாம்பு கடித்த பேருந்து ஓட்டுநர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-01-11 16:22 GMT

பைல் படம் 

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே தம்மம்பட்டியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பாம்பு கடித்த பேருந்து ஓட்டுநர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓணான் கரடு பகுதியில், அரசு போக்குவரத்துக்கழக பணிமனை உள்ளது. இங்கிருந்து 29 பஸ்கள் இயக்கப்படுகிறது. நேற்று காலை, சென்னைக்கு இயக்கும் பேருந்தின் ஓட்டுநரான ரஞ்சித் (50) என்பவர். பணிமனையில் இருட்டாக இருந்த கழிவறைக்கு சென்றார். அப்போது, உள்ளே பதுங்கியிருந்த விஷப்பாம்பு அவரை கடித்தது. அவரது சத்தம் கேட்டு, பணிமனையில் இருந்த தொழிலாளர்கள், அவரை தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து. மேல் சிகிச்சைக் காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மலையடிவாரத்தில் உள்ள பணிமனையின் பாதுகாப்புக்காக சுற்றுச்சுவர் இல்லாததால், விஷப்பாம்புகள் பணிமனைக்குள் அடிக்கடி வந்து செல்வதாக போக்குவரத்து தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News