திருநங்கையர்களுக்கான சிறப்பு முகாம் !
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருநங்கையர்களுக்கான ஒருநாள் சிறப்பு முகாம் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது.
சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் ஒரே நாளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் பொருட்டு நீலகிரி மாவட்ட சமூக நலத்துறை மற்றும் இதர நலத்திட்ட சேவைகள் வழங்கும் துறைகளின் சார்பில் வருகிற 21-ம் தேதி நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருநங்கையர்களுக்கான ஒருநாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
முகாமில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கையர்கள் அடையாள அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, சுயதொழில் தொடங்க மானியத் தொகை, கல்வி உதவித் தொகை, சுய உதவிக்குழு பயிற்சி, இலவச தையல் இயந்திரங்கள், முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகிய நலத்திட்ட சேவைகளைப் பெற உரிய சான்றாவணங்களுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.