பயனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் !

திண்டுக்கல் மாவட்டம் வடகாட்டுபட்டி கிராமத்தில் மரியம் அறக்கட்டளையின் சார்பில் பயனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.;

Update: 2024-03-06 10:14 GMT

 மருத்துவ முகாம்

திண்டுக்கல் மாவட்டம் வடகாட்டுபட்டி கிராமத்தில் மரியம் அறக்கட்டளையின் சார்பில் பயனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.இதில் அருட்சகோதரி டாக்டர் ரோசாலி,டாக்டர் சோபியா மற்றும் செவிலியர் ஷோபனா ஆகியோர் கலந்துகொண்டு அனைத்து பயனாளிகளையும் முழு உடல் பரிசோதனை செய்தனர்.குறிப்பாக உடல் எடை, சர்க்கரையின் அளவு, ரத்த கொதிப்பு அளவு போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தேவையானவர்களுக்கு இலவச மருந்து மாத்திரைகள் ஊசி மற்றும் சத்து டானிக் ஆகியவை வழங்கப்பட்டன.இதில் 50-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்கள்,கணவனை இழந்தவர்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்கள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News