மோட்டார் சைக்கிளில் சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்து பலி
மோட்டார் சைக்கிளில் சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திடிரென மயங்கி விழுந்து பலி. போலீசார் விசாரணை;
By : King 24x7 Angel
Update: 2024-02-19 11:51 GMT
சப்-இன்ஸ்பெக்டர்
மயங்கி விழுந்து பலி
சேலம் மாநகரமதுவிலக்கு பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தவர் சிவாஜிகணேசன் (50), இவர் சேலம் லைன்மேட்டில் உள்ள புதிய போலிஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று செவ்வாய்ப்பேட்டை வெங்கடப்பன் சாலையில் உள்ள மரக்கடை சந்து பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிவாஜி கணேசன் திடீரென மயங்கி சாலையில் விழுந்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் மற்றும் செவ்வாய்ப்பேட்டை போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.