சிகிச்சைக்கு ஒரு மணிநேரம் காத்திருந்த மாணவன்

Update: 2023-11-04 05:02 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கெங்கவல்லி அருகே 74.கிருஷ்ணாபுரம் பகு தியைச் சேர்ந்த விவசாயி ராஜா. இவரது மகன் அஜய்(12), 6ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற மாணவனுக்கு, உடல்நலக்குறைவு ஏற் பட்டதால், ஆசிரியர்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர்.

அதன்படி, மாணவனை கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்தும், மருத் துவமனையில் டாக்டர், செவிலியர் என யாரும் பணியில் இல்லை. இதுகுறித்து, ராஜா 104 என்ற எண்ணில் புகார் அளித்தார். இதனையடுத்து, டாக்டர் முத்துவேல் என்பவர் அங்கு வந்து, மாணவனுக்கு 2 மாத்திரைகளை மட்டும் கொடுத்து அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து ராஜா கூறுகையில், 'அரசு மருத்துவமனை யில் சுமார் ஒரு மணி நேரமாக டாக்டர் இல்லாததால், மகனுடன் காத்திருந்தேன். புகார் அளித்த பிறகு, மருத்து வர் வந்து பரிசோதனை செய்யாமல், 2 மாத்திரை மட்டும் கொடுத்து அனுப்பி உள்ளார். மீண்டும் தனியார் மருத் துவமனையில் எனது மகனை சிகிச்சைக்காக அனுப்பி உள்ளேன். பணியின் போது அலட்சியமாக செயல்பட்டு வரும் அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News