நெல்லையில் வெற்றிகரமாக முடிந்த சோதனை !!
எஸ்.எம்.எஸ்.டி.எம். என்ற மாதிரி என்ஜினின் சோதனை பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது.;
By : King 24x7 Angel
Update: 2024-06-01 06:03 GMT
என்ஜினின் சோதனை
நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்துள்ள காவல்கிணறு மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் எஸ்.எம்.எஸ்.டி.எம். என்ற மாதிரி என்ஜினின் சோதனை பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது.அதன்படி 3வது கட்டமாக 1,700 வினாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது. அதற்கான கவுண்டவுன் ஆரம்பிக்கப்பட்டு நேற்று (மே 31) சோதனை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்தது.