லத்துவாடி ஏரிக்கரையில் திடீர் தீ விபத்து !

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வீரகனூர் அருகே லத்துவாடி ஏரிக்கரையில் நேற்று திடீ ரென தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2024-03-19 09:56 GMT

தீ விபத்து

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வீரகனூர் அருகே லத்துவாடி ஏரிக்கரையில் நேற்று திடீ ரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் 25 ஏக்கரில் வெயி லுக்கு காய்ந்திருந்த மரம், செடிகள் எரிந்து சேதம டைந்தது.சேலம் மாவட்டம், வீரகனூர் அடுத்த லத் துவாடி ஊராட்சியில் 127 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி அமைந்து உள்ளது. மாவட்டத்தில் கடும் வெயில் அடித்து வருவதால், லத்துவாடி ஏரிக்கரையில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து போனது. இந்நிலையில் நேற்று மதியம் 3 மணியள வில் ஏரிக்கரை பகுதியில் திடீரென்று தீப்பற்றிக் கொண்டது. இதைபார்த்த பொதுமக்கள், ஊராட்சிமன்ற தலைவர் கோமதி குழந்தைவேலுவிடம் தகவல் தெரிவித்தனர். அவர் கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரி வித்தார். நிலைய அலுவலர் (பொ) செல்லப்பாண்டி யன் தலைமையில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர். முன்னதாக ஊராட்சி சார்பில் தீ மேலும் பரவாமல் தடுக்க பொக்லின் இயந்திரம் மூலம் மணல் அள்ளி கொட்டப்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் இருந்த மரம், செடிகள் எரிந்து நாசமானது. இது குறித்து வீரகனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News