காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு
திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் நேற்று மாலை காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தலை முன்னிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
Update: 2024-03-22 10:05 GMT
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா. கிரிஸ்துராஜ் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் காங்கேயம் வட்டாச்சியர் அலுவலகத்தை வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திடீர் ஆய்வை மேற்கொண்டார். தேர்தலை முன்னிட்டு தேர்தல் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலங்களும் பார்வையிடப்படும் அந்த வகையில் காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் காங்கேயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூம் எனப்படும் தேர்தல் பாதுகாப்பு அறை, தபால் வாக்கு சம்பந்தப்பட்ட அலுவலகம் மற்றும் காங்கேயம் வட்டார அலுவலகத்தில் உள்ள அலுவலகங்களையும் மேற்பார்வையிட்டார். இந்நிகழ்வில் காங்கயம் வட்டாச்சியர் சு. மயில்சாமி, காங்கேயம் காவல் துணை கண்காணிப்பாளர் கு. பார்த்திபன், காங்கேயம் வருவாய் ஆய்வாளர் விதுர்வேந்தன் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.