உத்திரமேரூரில் பகலிலும் ஒளிரும் உயர்கோபுர மின்விளக்கு
பகலிலும் ஒளிரும் உயர்கோபுர மின் விளக்கு உத்திரமேரூரில் பேரூராட்சி நிதி வீணடிக்கபட்டுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-18 11:29 GMT
உயர்கோபுர மின் விளக்கு
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பேருந்து நிலையம் எதிரில், இரவிலும் பகல்போல வெளிச்சம் தரும் வகையில், உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சி நிர்வாகம், உயர்கோபுர மின்விளக்கை முறையாக பராமரிக்காததால், இரவு, பகல் என தொடர்ந்து 24 மணி நேரமும் உயர்கோபுர மின்விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது. இதனால், மின்சாரம் விரயமாவதுடன், பல்புகளும் விரைவில் பழுதாகும் சூழல் உள்ளது.
உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகம் மின்வாரியத்திற்கு கூடுதலாக மின்கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால், பேரூராட்சி நிதியும் வீணாகிறது. எனவே, உயர்கோபுர மின்விளக்கை முறையாக பராமரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.