பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் குண்டர் சட்டத்தில் அடைப்பு !
பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
By : King 24x7 Angel
Update: 2024-03-16 11:47 GMT
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி வட்டவளை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்சிங் (33). இவர் அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். மாணவி ஒருவர் ஆசிரியர் சுந்தர்சிங் மீது பாலியல் புகார் அளித்தார். இது தொடர்பாக கன்னியாகுமரி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆசிரியர் சுந்தர் சிங் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்தனர். அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ஆசிரியர் சுந்தர் சிங் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவரை கன்னியாகுமரி மகளிர் இன்ஸ்பெக்டர் சிவா கலை தலைமையிலான போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 10 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.