திருமணம் செய்து வைக்காததால் விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

திருமணம் செய்து வைக்காததால் விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-12-11 11:57 GMT

கோப்பு படம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தர்மபுரி மாவட்டம். திருமணம் செய்து வைக்காததால் விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை . பாலக்கோடு, டிச.11: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மைதீன் நகரை சேர்ந்த மினி சரக்கு லாரி டிரைவர் ஆரிப் (24) இவர் பெங்களுரில் மினி சரக்கு லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார்.

இவரது தந்தை இறந்து விட்டார். தாய் மற்றும் அண்ணன் உள்ளனர். ஆரிப் தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி குடும்பத்தினரை வற்புறுத்தி வந்துள்ளார். பெண் அமையாததால் இன்னும் திருமணம் நடைபெறவில்லை.

Advertisement

இந்நிலையில் நேற்று முன்தினம் பெங்களுரில் இருந்து வீட்டிற்க்கு வந்தவர் உடனடியாக தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என கேட்டுள்ளார். இதில் இவருக்கும் இவரது அம்மா மற்றும் அண்ணனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ஆரிப் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து நேற்று மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த பாலக்கோடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News