கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி!
கண்ணமங்கலம் அருகே மாதா கோவில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.;
Update: 2024-03-29 09:42 GMT
வாலிபர் பலி
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் நிர்மல் (வயது 29). இவர் மாதா கோவில் கோபுரத்தில் மின்விளக்கு அமைக்க மேலே ஏறிய போது கோபுரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த நிர்மலை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து சந்தவாசல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.