ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி

திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக ஆற்றில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-03-29 13:36 GMT

வாலிபர் பலி 

 திருவெண்ணைநல்லூர் பகுதியைச் சேர்ந்த குருவின் மகன் குபேந்திரன் (21). இவர் இன்று தன் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக தனது நண்பரான விக்னேஷ் (23) ,ரகுபதி (22) சேர்ந்து திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் தரைப்பாலம் அருகில் குளிக்கச் சென்றுள்ளார்.

எதிர்பாராத விதமாக குபேந்திரன் நீரில் மூழ்குவதை கண்டு அதிர்ந்த நண்பர்கள் கூச்சலிட்டனர். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் விக்னேஷ் மற்றும் ரகுபதி உதவியுடன் நீரில் மூழ்கிய குபேந்திரன் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குபேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்தநாளில் வாலிபர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News