திருநல்லூர் பெரிய குளத்தில் நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழா
நிகழ்வுகள் திருநல்லூர் பெரிய குளத்தில் நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழா!
By : King News 24x7
Update: 2024-03-10 15:22 GMT
விராலிமலை புதுக்கோட்டை மாவட்டம் குளங்களில் தொடங்கியது நிகழாண்டு மீன்பிடி திருவிழா... கிராமத்து அசைவ பிரியர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி... மீன் பிடி வலையில் மீன் சிக்காமல் பாம்பு சிக்கியதால் மீன் பிடிக்க வந்தவர்கள் அதிர்ச்சி.. விராலிமலை அருகே திருநல்லூர் பெரிய குளத்தில் நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவில் விரால், கெண்டை,கட்லா,குறவை என நாட்டு வகை மீன்களை மகிழ்ச்சியுடன் பிடித்து செல்லலாம் என்று வந்த மீன் பிடியாளர்களின் வலையில் மீன் சிக்காமல் பாம்பு சிக்கியதால் அதிர்ச்சி அடைந்தனர் தொடர்ந்து குளத்திற்குள் மீன்களை தேடிய போதும் சிறிய வகை மீன்களை தவிர பெரியவகை மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள திருநல்லூர் குளத்தில் இன்று காலை மீன்பிடி திருவிழா நடைபெறுவதாக சமுக வலைதளங்களில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிகாலை முதலே பல்வேறு பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கடந்த ஆண்டை போலவே நிகழாண்டும் அதிகாலையே குளத்தின் கரையில் திரண்டனர். சுமார் 100 ஏக்கருக்கு மேல் பரந்து விரிந்த குளம் என்பதால் மீன்பிடி திருவிழாவில் அதிகளவு பொதுமக்கள் திரண்டனர். இதனையடுத்து காலை 7 மணிக்கு ஊர் முக்கியஸ்தர் வெள்ளை வீசியதை(உத்தரவு )தொடர்ந்து கரையில் காத்திருந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த மீன்பிடி சாதனங்களான வலை, கச்சா, கூடை,பரி உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் குளத்திற்குள் தாவி குதித்து மீன்களை தேடினர். இதில் விரால், கெலுத்தி,கட்லா, கெண்டை வகை மீன்கள் சிக்காமல் பாம்பு சிக்கி அதிர்ச்சி ஏற்படுத்தியது இருப்பினும் ஆறுதல் ஏற்படுத்தும் விதமாக ஒருவருக்கு மட்டும் சுமார் இரண்டு கிலோ அளவில் விரால் மீன் சிக்கியது