சூறைக்காற்றில் வேருடன் சாய்ந்த மரம்

மாங்காடு அருகே சூறைக்காற்றில் வீட்டின் மேல் மரம் முறிந்து விழுந்ததால் அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

Update: 2024-05-25 12:35 GMT

சூறைக்காற்றில் சாய்ந்த மரம்

குமரி மாவட்டத்தில் இன்று காலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது இதில் மங்காடு பகுதியில் உள்ள காக்கர்ணம் பகுதியில் உள்ள மோகன்தாஸ் என்பவரது வீட்டின் மீது அவரது வீட்டில் அருகில் உள்ள தாம்சன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் நின்றிருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து வீட்டின் மீது விழுந்துள்ளது.

இதில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர்தப்பிய நிலையில் தகவலறிந்து வந்த ஊராட்சி தலைவர் பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தார் தகவலறிந்து வந்த பேரிடர் மீட்பு குழுவினர் முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

இதற்கிடையே அந்த பகுதியில் நின்றிருந்த மற்றொரு மரமும் திடீரென முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்துள்ளது இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாத நிலையில் இரண்டு மின்கம்பங்கள் முற்றிலுமாக முறிந்து சேதமடைந்தது இதன் காரணமாக அந்த பகுதியில் மின்சாரம் தடைபட்டு உள்ள நிலையில் மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News