சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி தண்ணீர் லாரியுடன் மோதி விபத்து

சாத்தூர் அருகே சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி தண்ணீர் லாரியுடன் மோதி விபத்து விபத்தில் சிக்கிய சிலிண்டர் லாரி ஓட்டுனரை கடும் போராட்டத்திற்கு பின்னர் மீட்ட போலீசார் .

Update: 2024-01-03 08:53 GMT
சாத்தூர் அருகே சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி தண்ணீர் லாரியுடன் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய சிலிண்டர் லாரி ஓட்டுனரை கடும் போராட்டத்திற்கு பின்னர் போலீசார் மீட்டெடுத்தனர். நெல்லை மாவட்டம் கங்கை கொண்டான் பகுதியில் இருந்து விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள கேஸ் ஏஜென்சிக்கு சமையல் சிலிண்டர்களை ஏற்றி சென்ற லாரியை அம்பை பகுதியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன்(28) என்பவர் ஒட்டி வந்து உள்ளார். இந்த நிலையில் சமையல் சிலிண்டர் களை ஏற்றி வந்த லாரி சாத்தூர் அருகே உள்ள சின்னஒடைப்பட்டி விலக்கு அருகே சென்ற போது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி கொண்டிருந்த சாத்தூர் சுங்கச் சாவடிக்கு சொந்தமான லாரி மீது சமையல் சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சமையல் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் முத்து கிருஷ்ணன் லாரியில் சிக்கி கொண்டதை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் லாரியில் சிக்கி இருந்த சிலிண்டர் லாரி ஓட்டுநரை மீட்டு கோவில்பட்டி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். மேலும் இந்த விபத்து காரணமாக கன்னியாகுமரி தேசிய நெடுஞ் சாலையில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சாலை விபத்தில் முழுமையாக சமையல் எரிவாயு சிலிண்டர் நிரப்பப்பட்ட லாரியை போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு லாரியை அப்புறப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Tags:    

Similar News