முட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

பல்லடம் அருகே அரசு பேருந்து மோதி முட்டைகளை ஏற்றுச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லட்சக்கணக்கான முட்டைகள் சேதமடைந்தன.;

Update: 2024-06-17 14:32 GMT
முட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

பல்லடம் அருகே அரசு பேருந்து மோதி முட்டைகளை ஏற்றுச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லட்சக்கணக்கான முட்டைகள் சேதமடைந்தன.


  • whatsapp icon

பல்லடம் அருகே கள்ளக்கிணறு என்ற இடத்தில் பின்னால் வந்த அரசு பேருந்து மோதி முட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து-சாலையில் சிதறி சேதம் அடைந்த லட்சக்கணக்கான முட்டைகள்.... திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நந்தவனம்பாளையத்தில் இருந்து காளிவேலம்பட்டி என்ற இடத்திற்கு கறிக்கோழி குஞ்சுகள் தயாரிப்பிற்காக லட்சக்கணக்கான முட்டைகள் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று பல்லடத்தை சேர்ந்த வரதராஜ் என்பவர் கண்டெய்னர் லாரியில் லட்சக்கணக்கான முட்டைகளை ஏற்றிக்கொண்டு தாராபுரம் பல்லடம் சாலையில் பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது ராஜபாளையத்தில் இருந்து கோவை நோக்கி லாரியின் பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் கண்டெய்னர் லாரியில் ஏற்றி வரப்பட்ட லட்சக்கணக்கான முட்டைகள் முழுவதுமாக சாலையில் சிதறி சேதம் அடைந்தது.அதிர்ஷடவசமாக லாரி ஓட்டுநர் மற்றும் பேருந்தில் வந்த பயணிகள் உயிர்த்தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வேறு வாகனத்தை கொண்டு வந்த முட்டை நிறுவனத்தினர் மீதம் உள்ள சேதம் அடையாத முட்டைகளை எடுத்துச் சென்றனர். சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல்துறையினர் சாலையில் கவிழ்ந்து கிடக்கும் லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News