கோதுமை ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்து

மானாமதுரையில் கோதுமை ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்து - போலீசார் விசாரணை

Update: 2024-02-21 05:14 GMT

தலைகீழாக கவிழ்ந்த லாரி 

மதுரையில் அமைந்துள்ள இந்திய உணவுக் கழகத்திலிருந்து மானாமதுரையில் உள்ள நுகர்பொருள் வணிக கிடங்கிற்கு சுமார் 22 டன் கோதுமை மூட்டைகளை ஏற்றி வந்த லாரி மதுரை - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும்போது மானாமதுரை தல்லாகுளம் முனியாண்டி கோவில் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலை நடுவே இருந்த சென்டர் மீடியேட்டரில் மோதி லாரி கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் சிறு காயங்களுடன் தப்பினார். ஏற்றி வந்த கோதுமை மூட்டைகள் அனைத்தும் நெடுஞ்சாலையில் விழுந்து சேதமாகின. மேலும் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ராட்சச கிரேன் மூலம் லாரியை மீட்டனர். மேலும் சிதறி கிடந்த கோதுமை மூட்டைகளை வேறொரு லாரியில் மாற்றினர். இதுகுறித்து மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

Similar News