சிவன்மலை அருகே வைக்கோல் ஏற்றி வந்த வேன் தீப்பிடித்து விபத்து

காங்கேயம் அடுத்த சிவன்மலை அருகே வைக்கோல் ஏற்றி வந்த ஈச்சர் வேனில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது.;

Update: 2024-04-29 13:37 GMT

தீயை அணைக்கும் பணியில் வீரர்கள்

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த சிவன்மலை பஞ்சாயத்து நொச்சி தோட்டத்தை சேர்ந்தவர் தங்கமுத்து வயது 58. இவரது தோட்டத்தில் கால்நடைகளை வளர்த்து வருகிறார். அதற்காக வைக்கோல் புற்களை வாங்கியுள்ளார்.

எனவே கடலூர் மாவட்டத்தை அன்புக்குமார் வயது 38 என்பவர் செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து வைக்கோல் புற்களை ஈச்சர் வேனில் ஏற்றிக்கொண்டு சிவன்மலையிலுள்ள தங்கமுத்து தோட்டத்தில் இறக்குவதற்கு லோடு ஏற்றி வந்துள்ளார்.

Advertisement

அப்போது‌ தோட்டத்திற்குள் நுழைந்த போது அவ்வழியாக சென்ற மின்கம்பிகள் ஒரசியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து வைக்கோல் புல்லுகட்டில் தீப்பிடித்துள்ளது. இதனை அடுத்து வாகனத்தில் உள்ள மற்ற புல்லுகட்டுக்கும் தீ பரவ ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் மளமளவென தீ எரிய தொடங்கியதால் பயந்துப்போன தோட்ட உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். மேலும் வாகனத்திற்கும் ஆட்களுக்கும் எந்தவொரு அசம்பாவிதங்களும் இன்றி தீ அனைக்கப்பட்டது.‌ மேலும் இந்த தீ விபத்து குறித்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News