சிவன்மலை அருகே வேன் சரக்கு லாரி மோதி விபத்து
சிவன்மலை அருகே சரக்கு வேணும் சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கு காயம் இன்றி உயிர்த்தபினர். விபத்து நடந்த இடத்தில் வாகனத்தை அப்புறப்படுத்தாமல் இரு ஓட்டுனர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வாகனங்களை அப்புறப்படுத்தினர்.
Update: 2024-03-22 09:55 GMT
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சிவன்மலை அடுத்த பெருமாள் மலை அருகே நேற்று மாலை சரக்கு ஏற்றி வந்த வேனும் ,சரக்கு லாரியும் திருப்பூர் சாலையில் நேருக்கு நேர் திசையில் வந்து கொண்டிருந்தது. அப்போது லாரி ஓட்டுனரின் கவனக்குறைவால் சாலையின் எதிர் திசையில் வந்த வேன்மீது மோதி விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக காங்கேயம் திருப்பூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இன்றி உயர் தப்பினர். மேலும் இந்த பகுதியான தனியார் பள்ளி உள்ளது. மேலும் சரக்கு வேனை ஒட்டி வந்த வேலுச்சாமி மற்றும் லாரி ஓட்டுநர் யோகமணி ஆகியோர் சம்பவ இடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் இந்த விபத்து குறித்து காங்கேயம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை இரண்டு வாகனங்களையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.