விருதுநகரில் மஸ்தூர் பணியாளர்கள் விடிய விடிய காத்திருப்பு போராட்டம்

விருதுநகரில் கொசு புழு ஒழிப்பு மஸ்தூர் பணியாளர்கள் செல்போனில் டார்ச் லைட் அடித்து இரவு விடிய விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-05-11 10:51 GMT

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 

பணி நீக்கம் செய்யப்பட்ட 350 கொசு புழு ஒழிப்பு மஸ்தூர் பணியாளர்களுக்கு தொடர்ந்து பணி வழங்க கோரியும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தவறிய விருதுநகர் ஆட்சியரை கண்டித்தும் மாவட்ட கொசு புழு ஒழிப்பு மஸ்தூர் சங்கத்தினர் இரவில் தங்களது கைகளில் செல்போனில் டார்ச் லைட்டுகள் அடித்தும் விடிய விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

  விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த எட்டு ஆண்டுகளாக மஸ்தூர்களாக பணிபுரிந்த 573 பேரில் 223 பேர்களுக்கு மட்டுமே பணி வழங்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனால் 8 ஆண்டுகளாக பணிபுரிந்த 350 மஸ்தூர் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனை கண்டித்து விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கொசு புழு ஒழிப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதவை தொடர்ந்து இன்று விருதுநகர் விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட 350 மஸ்தூர் பணியாளர்கள் மற்றும் அச்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து சங்க நிர்வாகிகளுடன் ஆட்சியர் ஜெயசீலன் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை ஏமாற்றம் அளித்ததால் விருதுநகர் ஆட்சியர் வளாகத்தில் மஸ்தூர் பணியாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவர்களது செல்போனில் டார்ச் லைட் அடித்து இரவு முழுவதும் விடிய விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்காக பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட செயலாளர் வைரவன் கூறியதாவது, டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வந்த 350 மஸ்தூர் பணியாளர்களை உடனடியாக மீண்டும் பணி வழங்க வேண்டும். இதனால் 350 பணியாளர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றன. மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கைய மனு வழங்கியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து,

இரவு முழுவதும் விடிய விடிய காத்திருப்பு போராட்டத்தில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை மீண்டும் பணியமற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News