யோகா போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
யூனிவேர்சல் யோகா விளையாட்டு சம்மேளனம் நடத்திய அகில உலக யோகா விளையாட்டு போட்டி கடந்த 16ம் தேதி டெல்லியில் உள்ள காஜியாபாத்தில் நடைபெற்றது. இந்த யோகா போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, நேபாள், மலேசியா, ஸ்ரீலங்கா, எகிப்து, அமெரிக்கா உள்ளிட்ட 7 நாடுகளிலிருந்து 4 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 250 பேர் பங்குபெற்றனர்.
அதில் இந்தியாவிலிருந்து மட்டும் 200 பேர் அதில் தமிழத்திலிருந்து 16 பேரும் குறிப்பாக விருதுநகரிலிருந்து 6ம் வகுப்பு அரசு பள்ளி மாணவி, குருவித்யாஸ்ரீ, 4 வயது மாணவன் முகமது தியான் உட்பட 13 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். டெல்லியில் உள்ள காஜியாபாத்தில் பாரம்பரிய யோகா, யோகா, ஆர்ட்டிஸ்ட் யோகா என மூன்று பிரிவுகளில் வயது வாரியாக யோகா போட்டிகள் நடைபெற்றன. இதில் பாரம்பரிய யோகா போட்டியில் 6ம் வகுப்பு அரசு பள்ளி மாணவி குரு வித்யாஸ்ரீ, தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவன் கோபிநாத் (15) மற்றும் தனியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 4ம் வகுப்பு பயிலும் பிரியதர்ஷினி(9) ஆகிய மூன்று பேர் கலந்துகொண்டு தங்கப்பதக்கமும், மற்ற 13 மாணவ, மாணவிகள் வெண்கலப் பதக்கமும் வென்று தமிழகத்திற்கும், அவர்களது மாவட்டமான விருதுநகருக்கும் பெருமை சேர்த்துள்ளனர். அவர்கள் 16 பேரும் இன்று மாலை ரயில் மூலமாக விருதுநகர் வந்தடைந்தனர். அவர்களுக்கு விருதுநகர் மக்கள் சார்பாக சிறப்பான வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.