ரம்ஜான் பண்டிகையை யொட்டி களைகட்டிய சந்தை
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரம் தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறும். இங்கு தரமான நாட்டுக்கோழி ஒன்று ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனையானது. 10 கிலோ கொண்ட ஆடு ரூ.6500 முதல் ரூ.8000 வரை விற்கப்பட்டது.
By : King 24x7 Angel
Update: 2024-03-21 09:55 GMT
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரம் தோறும் வியாழக்கிழமைவாரச்சந்தை நடைபெறும். அதிகாலை 2 மணிக்கு தொடங்கி 9 மணி வரை நடைபெறும் இந்த சந்தையில் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆடு, கோழி, சேவல் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.மேலும் ரம்ஜான் பண்டிகைக்காகவும், தேர்தலுக்காக தொண்டர்களுக்கு கிடா விருந்து வைக்கவும் ஆடுகள் அதிக அளவு விற்பனையாகும் என நினைத்து ஏராளமான செம்மறி, வெள்ளாடுகள் கொண்டு வரப்பட்டன. மெயின் ரோட்டில் வழியாக வராமல் புறவழிச்சாலையில் உள்ள கிராமப்புறங்கள் வழியாக அதிக அளவு வாகனங்கள் சந்தைக்கு வந்தன.தரமான நாட்டுக்கோழி ஒன்று ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனையானது. 10 கிலோ கொண்ட ஆடு ரூ.6500 முதல் ரூ.8000 வரை விற்கப்பட்டது.