கூடலூர் அருகே உலா வந்த காட்டு யானை - வாகன ஓட்டிகள் அச்சம்.

கூடலூர் அருகே தேவர்சோலையில் சாலையில் நின்றிருந்த காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்

Update: 2023-10-24 06:26 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சமீப நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டுகிறது. குடிநீர் மற்றும் உணவு தேடி ஊருக்குள் உலா வரும் காட்டு யானைகள் மனிதர்களை தாக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்த காட்டு யானைகளை கண்காணிக்க வனத்துறையினர் பல குழுக்களாக பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு கூடலூர் அருகே தேவர்சோலை பகுதியில் ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் முடிந்து வாகனத்தில் வாகன ஓட்டிகள் சென்று கொண்டிருக்கும் போது காவல் நிலையம் அருகே காட்டு யானை நின்றிருந்தது. இதைக் கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். மேலும் காட்டு யானை துரத்த வனத்துறையினர் வெடிகளை வீசி துரத்தும் பொழுது திடீரென கோபம் அடைந்த காட்டு யானை தாக்க ஓடி வந்தது இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். நீண்ட நேர விரட்டலுக்கு பின் காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது.


Tags:    

Similar News