சரக்கு ஆட்டோ மோதி அரசு மருத்துவமனை பெண் ஊழியர் பலி
வெள்ளியாவிளையில் இருசக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் காயமடைந்த அரசு மருத்துவமனை பெண் ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கருங்கல் அருகே வெள்ளியாவிளை தேரிவிளை பகுதியை சேர்ந்தவர் மேட்டன்.சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷெர்லின் பாப்பா.தேங்காப்பட்டணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் லேப் டெக்னீஷியனாக பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் ஷெர்லின் பாப்பாவிற்கு தக்கலை அரசு மருத்துவமனையில் மாற்றுப்பணி வழங்கப் பட்டிருந்தது.
பணி முடிந்து கருங்கல் கருமாவிளை வழியாக இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டார். கருமாவிளை சந்திப்பில் இவர்களது வீட்டருகேஉள்ள பிரேம லதா என்ற ஆசிரியை பஸ்சுக்கு நின்றிருந்தார். அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கெண்டு வெள்ளியாவிளை அருகே செல்லும்போது. தவறான பாதையில் வேகமாக வந்த ஆட்டோ இவர்கள் மீது மோதியது. இதில் ஷெர்லின் பாப்பா படுகாயமடைந்தார். பிரேமலதாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஷெர்லின் பாப்பாவை முதலில் கருங்கலில் ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை ஷெர்லின் பாப்பா இறந்தார். இது குறித்து கருங்கல் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்