தீ விபத்தில் சிகிச்சை பெற்ற பெண் பலி
சமையல் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது;
Update: 2023-12-27 06:17 GMT
தீ விபத்தில் சிகிச்சை பெற்ற பெண் பலி
கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகள் லட்சுமி,48; கூலி தொழிலாளி. கடந்த 20ம் தேதி காலை 9:00 மணியளவில் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது நொடிப்பு ஏற்பட்டு லட்சுமி கீழே விழுந்தார். அப்போது, சேலை தீ பிடித்து எரிந்ததில் லட்சுமிக்கு தீக்காயம் ஏற்பட்டது. உடன் சுப்ரமணியன் தீக்காயமடைந்த மனைவி லட்சுமியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி நேற்று மதியம் உயிரிழந்தார். வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.