நடந்து சென்ற தொழிலாளி கீழே விழுந்து சாவு
திருவட்டார் அருகே நடந்து சென்ற தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்தார்.
Update: 2024-02-23 11:11 GMT
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே பாத்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் குட்டி மகன் அஜித் குமார் (49) தொழிலாளி. அஜித்குமாருக்கு இரண்டு சிறுநீரகங்கள்லும் பாதிப்பு ஏற்பட்டதால் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் அஜித் குமாரின் மனைவி அவரை பிரிந்து சென்று விட்டாராம். இதை அடுத்து அஜித்குமார் தனது தம்பி ராஜ்குமார் பராமரிப்பில் இருந்து வந்தார். சம்பவ தினம் தனது ஆட்டோவில் அண்ணனை ஏற்றுக்கொண்டு குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுப்பதற்காக அஜித்குமார் புறப்பட்டு சென்றார். செல்லும் வழியில் டீ குடிக்க கடை .அருகே ஆட்டோவை நிறுத்தி உள்ளனர். ஆட்டோவிலிருந்து இறங்கி நடந்து சென்ற அஜித்குமார் திடீரென நிலை தடுமாறு கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அஜித்குமாரை மீட்டு குலசேகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் அஜித்குமார் திடீரென இன்று உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.