கரூர் அருகே பைக்கில் கீழே விழுந்த இளம்பெண்.

கரூர் அருகே பைக்கில் கீழே விழுந்த இளம்பெண் காயமடைந்தார்.

Update: 2024-01-25 08:51 GMT

கோப்பு படம் 

கரூர், தெற்கு காந்திகிராமம், சக்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி வயது 51. இவரது உறவினர் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் மனைவி ஜோதிமணி வயது 30 என்பவரை, அழைத்துக் கொண்டு அவர்கள் டூவீலரில் ஜனவரி 19ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் கரூர் - திருச்சி சாலையில் சென்று கொண்டு இருந்தார்.

இவர்களது வாகனம் லைட் ஹவுஸ் அமராவதி பாலம் அருகே சென்ற போது, பின்னால் அமர்ந்து சென்ற ஜோதிமணி எதிர்பாராத விதமாக கீழ விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜோதி மணியின் கணவர் முருகேசன் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல் துறையினர்,

இது தொடர்பாக, டூவீலரை கவனக் குறைவாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய கிருஷ்ணமூர்த்தி மீது நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags:    

Similar News