வலிப்பு நோயால் வாலிபர் உயிரிழப்பு
மருத்தாளம்பட்டி பகுதியை சேர்ந்த நவீன்குமார் என்ற இளைஞர் அரூர் சேலம் சாலையில் வலிப்பு நோயால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மருத்தாளம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார். கூலி தொழிலாளி. இவருக்கு வலிப்பு நோய் இருந்தது. அதற்கு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து வந்தார்.
நேற்று நவீன்குமார் வீட்டை விட்டு வெளியே செல்வதாக கூறி சென் றார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர்கள் தேடினர். அப்போது, சேலம் - அரூர் மெயின் சாலைசின்னான் குப்பம் பாலம் அருகே நவீன்குமார் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதைப்பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கோபிநாதம்பட்டி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் நவீன்குமார் வலிப்பு நோய் ஏற்பட்டு உயிரிழந்தார் என்பது தெரியவந்தது.