தனியார் ஓட்டலில் மாரடைப்பால் வாலிபர் உயிரிழப்பு
கரூரில் உள்ள தனியார் ஓட்டலில் மாரடைப்பால் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.
கரூர் அடுத்த ராயனூர் பகுதியில் உள்ள தாரணி அப்பார்ட்மெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் . இவர் ஜூன் 15ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில், கரூர், திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதியில் உள்ள சிவ முருகா ஓட்டலுக்கு சென்றுள்ளார்.
அப்போது திடீரென அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக, அவரை பரிசோதித்த கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த மோகன்ராஜின் மனைவி தனலட்சுமி வயது 35 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த மோகன்ராஜ் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.