கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு
கந்தர்வகோட்டை அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-05-10 06:22 GMT
பலியான இளைஞர்
கந்தர்வகோட்டை ஒன்றியம், கொல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் மகன் விஷ்வா (22). இவர் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக நள்ளிரவு சென்றார். அப்போது, வயல் பகுதியில் நடந்து சென்றபோது அங்கிருந்த 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தார்.
தகவலறிந்த கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விஷ்வாவை மீட்டு கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, மேல் சிகிச்சைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி விஷ்வா உயிரிழந்தார். கந்தர்வகோட்டை போலீஸ வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.