ஆதீனத்தை மிரட்டிய வழக்கு: அதிமுக திமுகவினரையும் கைது செய்ய கோரிக்கை

தருமபுரம் ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் பாஜகவினரை தவிர, அதிமுக, திமுகவினரையும் கைது செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-05-02 00:41 GMT

தருமபுரம் ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் பாஜகவினரை தவிர, அதிமுக, திமுகவினரையும் கைது செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.


மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ ஆடியோ உள்ளதாக கூறி பலகோடி பணம்கேட்டு மிரட்டியதாக கடந்த பிப்ரவரி 28ம் தேதி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பாஜக அதிமுக, திமுக 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் பாஜக மாவட்ட தலைவர் அகோரம், செம்பனார்கோவில் கலைமகள் கல்வி நிலைய தாளாளர் குடியரசு, சீர்காழி பாஜக முன்னாள் ஒன்றிய செயலாளர் விக்னேஷ், தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் ஆடுதுறை வினோத், ஶ்ரீநிவாஸ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எஞ்சிய குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் சிறையில் உள்ள பாஜக மாவட்ட தலைவர் அகோரம், குடியரசு, உள்ளிட்ட 5 பேர் ஜாமின் நீதிமன்றம் மனு வைஉயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்தது. பாஜக மாவட்ட தலைவர் அகோரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு அளித்த நிலையில் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படாததால் ஜாமின் அளிக்க காவல்துறை ஆட்சேபம் தெரிவித்ததால் இரண்டு தடவை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் தருமபுரம் ஆதீனம் வழக்கில் எஞ்சிய குற்றவாளிகளை கைது செய்யகோரி மயிலாடுதுறை மாவட்ட இந்து முன்னணி தலைவர் சரண்ராஜ் தலைமையில் அமைப்பினர் மற்றும் பாஜக பொறுப்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில் தருமபுரம் ஆதீன வழக்கில் தேடப்’படும் குற்றவாளிகளாக உள்ள தருமபுரம் ஆதீன உதவியாளர் திருவையாறு செந்தில், திமுக ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமார், செங்கல்பட்டு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோரை கைது செய்யவில்லை. இவ்வழக்கில் 7 வதாக சேர்க்கப்பட்ட பாஜ மாவட்ட தலைவர் உள்ளிட்ட பாஜகவை சேர்ந்த சிலர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் கைது தடை ஆணை பெறாத நிலையில் வெளியில் உலா வருகிறார்கள். மக்கள் கண் முன்னாக உலா வருவதை நாங்கள் காண்கிறோம். அரசியல் உள்நோக்கத்தோடு பாஜகவை சேர்ந்தவர்களை மட்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக தோன்றுகிறது. எனவே மற்றகாவல்துறையினர் இவ்வழக்கில் ஒருதலைபட்சமாக செயல்படாமல் எப்ஐஆர் அறிக்கையில் உள்ளவர்களில் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பவர்களை உடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மயிலாடுதுறையில் இந்து முன்னணி சார்’பாக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News