பி.எம்கிசான் திட்ட தொகையை பெற ஆதார் இணைப்பு

பி.எம் கிசான் திட்டதவணை தொகையை பயனாளிகள் தொடர்ந்து பெற ஆதார் விவரங்களை இணைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்தார்.

Update: 2024-02-14 12:12 GMT

 மாவட்ட ஆட்சியர் கற்பகம்

மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ள தகவலில், பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு மூன்று தவணைகளில் ரூபாய் 2000 வீதம் மொத்தமாக ரூபாய் 6000 வழங்கப்பட்டு வருகிறது. பி.எம்.கிசான் திட்டப்பலனை பெற விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை பி.எம்.கிசான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் மற்றும் தங்களது வங்கி கணக்கினை நேரடி பணப்பரிமாற்றம் செய்வதற்கு ஏதுவாக மாற்றம் செய்திட வேண்டும்.

தங்களது ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்ய தவறிய மற்றும் வங்கி கணக்கினை நேரடி பணபரிமாற்றம் செய்ய தவறிய விவசாயிகளுக்கு 16-வது தவணை மற்றும் அதனை தொடர்ந்து வரும் தவணைகள் வழங்கப்படமாட்டாது. எனவே விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்ய அருகில் உள்ள இ-சேவை மையங்கள் அல்லது தபால் நிலையங்களை அணுகி உடனடியாக பதிவேற்றம் செய்திட வேண்டும். நேரடி பணப்பரிமாற்றம் செய்வதற்கு ஏதுவாக வங்கி கணக்கினை மாற்றுவதற்கு தங்களது வங்கி கணக்கு உள்ள சம்மந்தப்பட்ட வங்கி கிளைகளை அணுகி மேற்கூறிய செயல்முறையை செய்திட அறிவுறுத்தப்படுகிறது.

அல்லது இந்தியா போஸ்ட் வங்கிகளை அணுகி அவ்வங்கிகளில் புதிய வங்கி கணக்குகளை உருவாக்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கூறிய குறைபாடுகளை சரிசெய்து விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டப்பலனை தொடர்ந்து பெற வேண்டும். என மாவட்ட ஆட்சியர் கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News