10.5 கோடி மதிப்புள்ள நிலத்தை தானம் வழங்கிய ஆயி பூரணம் அம்மாள்

அரசு பள்ளிக்கு 10.5 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆயி பூரணம் அம்மாள் தானம் வழங்கினர்.

Update: 2024-02-06 15:07 GMT

ஆயி அம்மாள்

மதுரை சேர்ந்தவர் ஆயி பூரணம் அம்மாள்(52). இவரது கணவர் உக்கிரபாண்டியன். இவர்களது மகள் ஜனனிக்கு 1 வயதாக இருக்கும் போது கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்பு உக்கிர பாண்டியன் விபத்தில் காலமானார். அதன்பிறகு தனது மகளை படிக்க வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அனால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மகளும் உயிரிழந்தார். இவர்களது மகள் ஜனனி உயிரிழந்த நிலையில், அவரது நினைவாக நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும் என்று தாய் பூரணம் முடிவெடுத்துள்ளார்.இதனிடையே, கொடிக்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை அரசு உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்காக தனது சொத்தை தானமாக வழங்கியுள்ளார்.

பள்ளிக்கு கட்டடத்தை கட்டிக்கொள்வதற்காக அவர் கொடுத்த 1 ஏக்கர் 52 செண்டு சொத்தின் மதிப்பு ரூபாய் 7 கோடியாகும்.அதேபோல் கட்டடம் கட்டும்போது ஒரு வாசகம் பொறித்த கல்லை வைக்குமாறும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன்படி, பள்ளிக்கு கட்டடம் கட்டுகையில், அதற்கு ஜனனியின் நினைவு வளாகம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.அவரதுசேவையைப் பாராட்டி தமிழக அரசு சார்பில் சிறப்பு விருது அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவின் போது முதலமைச்சர் முக ஸ்டாலின் பூரணம் அம்மாளுக்கு, ஆளுநர் முன்னிலையில் சிறப்பு விருது வழங்கி கௌரவித்தார்.

இந்நிலையில், மதுரை கொடிக்குளம் அரசுப் பள்ளிக்கு மேலும் 91 செண்ட் நிலத்தைப் பூரணம் அம்மாள் வழங்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.3.5கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News