ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்பத்தூரில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அத்துமீறி ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2024-03-23 13:10 GMT

  டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்பத்தூரில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அத்துமீறி ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.  

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் டெல்லி முதல்வர் கைது கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனுமதி இன்றி ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

 . டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை நேற்று இரவு அமலாக்கத் துறை கைது செய்தது. டெல்லி யூனியன் பிரதேசத்தில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ரூ.2,800 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் காரணமாக இந்திய முழுவதும் ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆம் ஆத்மி கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ராதா மற்றும் மாவட்ட செயலாளர் தீனதயாளன் தலைமையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை கண்டித்து சுமார் 30க்கும் மேற்பட்டோர் பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசரின் முறையான அனுமதி இன்றி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் போலீஸாருக்கும் ஆம் ஆத்மி கட்சியினர்க்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

Similar News