ஆத்தூர் அதிமுக வேட்பாளருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சந்திப்பு
ஆத்தூர் தென்னங்குடி பாளையத்தில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தேமுதிக கூட்டணி கட்சி நிர்வாகிகள் சந்திப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுரு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தென்னங்குடி பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகள் சந்திப்பு ஆலோசனைக் கூட்டம் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஏ ஆர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக கூட்டத்தில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி .பின்னர். இந்த கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு பொதுச் செயலாளர்களின் கருத்தை வலுப்படுத்த தொகுதி கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக பொறுப்பாளர்களும் தொண்டர்களும்,
வெற்றிக்கு முழுமையாக பாடுபட வேண்டும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று கட்சியின் பொது செயலாளர் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் அதிமுக நகர செயலாளர் மோகன் தேமுதிக மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய,
நகர,பேரூர் கழக நிர்வாகிகள் ஊராட்சி வார்டு கழக நிர்வாகிகள், கிளைக் கழகத் தோழர்கள், சார்பணி செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், மகளிர் அணி சகோதரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.