ஆத்தூர் : முல்லைவாடி பொதுமக்கள் சாலை கழிவுநீர் வாய்க்கால் அமைத்து தரக்கோரி முற்றுகை

ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட 7 வது வார்டு முல்லைவாடி பகுதியில் சாலை வசதி மற்றும் கழிவுநீர் வசதி செய்து தரகோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் நகராட்சி பொறியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

Update: 2024-04-01 07:22 GMT

முற்றுகை

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 7வது வார்டு முல்லைவாடியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் முறையான சாலை வசதி மற்றும் கழிவு நீர் கால்வாய் செல்வதற்கான வசதி இல்லாததால் இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து நகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியம் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தொடர்ந்து நகராட்சி பொறியாளர் அறைக்கு சென்ற பொதுமக்கள் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சாலை வசதியும், கழிவு நீர் கால்வாய் செய்து தரக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நகராட்சி பொறியாளர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் அடிப்படையில் அனைவரும் அங்கிருந்து கலந்து சென்றனர்.
Tags:    

Similar News