வாக்குப்பதிவு பணிக்கு சுமார் 10,000 ஆசிரியர்கள் நியமனம்
திண்டுக்கல் மாவட்ட தேர்தல் பணிக்கு 10 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.;
Update: 2024-03-20 08:42 GMT
வாக்குப்பதிவு பணி
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு பணிக்கு சுமார் 10,000 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், ஆத்தூர், பழனி, ஒட்டன்சத்திரம்,நத்தம், நிலக்கோட்டை, வேடசந்தூர் ஆகிய ஏழு சட்டசபை தொகுதி உள்ளது. இந்த தொகுதிகள் தேர்தல் நடத்தை விதிகள் படி தேர்தல் பணியாற்ற ஆசிரியர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.தேர்தல் பணியில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் என சுமார் 20,000 பேர் பணியாற்ற உள்ளனர். வாக்குப்பதிவுக்கான பணிகளில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 10,000 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் .இந்த ஆசிரியர்களின் விவரப்பட்டியல் கல்வித் துறை மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டு வருகின்றன.