எருமப்பட்டி அருகே டெம்போ வேன் தீ பற்றி எரிந்தது.

வைக்கோல் ஏற்றி வந்த டெம்போவின் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-02-17 15:09 GMT
தீ பிடித்து எறிந்த டெம்போ

எருமப்பட்டி பிப்ரவரி 18 எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி புதுக்கோட்டை பிரிவு அருகே ஜானகிராமன் தோட்டம் உள்ளது இவர் மாடுகளையும் வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று திருச்சி மாவட்டம் ஆலத்தூர் உடையாம்பட்டி இருந்து வைக்கோல் போரை அதே ஊரை சேர்ந்த சூப்பர் மகன் வையாபுரி வயது 51 என்பவர் மகேந்திரா டெம்போ வேனில் வைக்கோல் பாறை ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டை பிரிவு தாண்டி ஜானகிராமன் தோட்டத்திற்கு செல்லும்பொழுது மேலே சென்ற மின்சார ஒயர் மோதி தீ பற்றியது.

உடனே அங்கிருந்து அவர்கள் நாமக்கல் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர் இருந்தும் வைக்கோல் முழுவதும் எரிந்து வண்டியும் பாதி எரிந்தது.

இதில் சுமார் மண்டி மற்றும் வைக்கோல் சேர்த்து ரூபாய் ஒரு லட்சம் மதிப்புகளுக்கு சேதம் அடைந்தது

Tags:    

Similar News