போக்குவரத்து மண்டல அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு
அம்பேத்கா் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் நேற்று சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.;
Update: 2024-04-13 02:59 GMT
அம்பேத்கா் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அம்பேத்கா் பிறந்தநாளான ஏப். 14- ஆம் தேதி நாடு முழுவதும் சமத்துவ நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் ஊழியா்கள் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொள்வது வழக்கம். நிகழாண்டு ஏப். 14 -ஆம் தேதி விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை வருவதால் வெள்ளிக்கிழமையே உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதன்படி, திருச்சி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மண்டல போக்குவரத்து பொதுமேலாளா் ஆ. முத்துகிருஷ்ணன் தலைமையில் அனைத்து போக்குவரத்துக்கழக பணியாளா்களும் சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.