சேலம் கலைக்கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பதவி ஏற்பு

சேலம் அரசு கலைக்கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

Update: 2024-01-12 11:44 GMT

நிவாகிகள் பதவியேற்பு

சேலம் குமாரசாமிபட்டி அரசு கலைக் கல்லூரி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கல்லூரியில் நடந்தது. இந்த ஆட்சி மன்ற குழுவின் தீர்மானத்தின்படி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் புதிய பொறுப்பாளர்கள் 7 பேர் நியமனம் செய்யப்பட்டனர்.

இவர்கள் பதவி ஏற்பு விழா நடந்தது. இதில் தலைவராக கல்லூரி முதல்வர் செண்பகலட்சுமியும், துணை தலைவர்களாக புவியமைப்பியல் இணைப் பேராசிரியர் விஜயகுமார், தனலட்சுமியும், செயலாளராக புவியியல் துறை இணைப்பேராசிரியர் அருள், இணைச் செயலாளர்களாக ஆங்கில துறை இணைப்பேராசிரியர் கங்காதரன், சமூகசேவகரும், தொழில் அதிபருமான கே.எம்.உலகநம்பி, பொருளாளராக, புவியமைப்பியல் துறை இணைப் பேராசிரியர் திருமுருகன் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.

இவர்களின்பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும் கூட்டத்தில் ஆண்டின் வரவு , செலவு கணக்கு அறிக்கை தாக்கல், புதிய திட்டம் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விழாவில் அரசியல் ஆய்வு துறையின் தலைவர் வீரமுத்து மற்றும் பல்வேறு துறைகளின் தலைவர்கள், பேராசிரியர்கள் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News