தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடந்த தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்வில் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர்.;
Update: 2024-02-01 03:47 GMT
உறுதிமொழி ஏற்பு
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காந்தியடிகளின் மகாத்மா நினைவு நாளையொட்டி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்பு தொழுநோய் மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா தலைமை வகித்து இந்த உறுதிமொழிகளை வாசித்தார். துறை அலுவலர்கள் பலரும் கலந்து உறுதிமொழியேற்றுக் கொண்டனர். ஆட்சியரின் நேர்முக உதவியாளர் து. தங்கவேல், ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சா. ஸ்ரீபிரியா தேன்மொழி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்கள் ராம்கணேஷ், நமச்சிவாயம், தொழுநோய் துணை இயக்குநர் எஸ்.சிவகாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.