படகில் விபத்து - வட மாநில தொழிலாளி உயிரிழப்பு

Update: 2023-11-03 03:40 GMT

திபாகர மாலிக்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குமரி மாவட்டம்  பிள்ளைத்தோப்பை சேர்ந்தவர் ஜெகன்.  இவரது படகில்  20 தொழிலாளர்கள்  முட்டம் மீன் பிடித்துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்றனர். நேற்று கன்னியாகுமாரி கடற்பகுதியிலிருந்து 30 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ஒடிசா தொழிலாளி திபாகர மாலிக் ( 64) கடலில் போட்டிருந்த ஆங்கரை மேலே எடுக்க முயற்சித்தார். அப்போது ஆங்கர் கயிறு வேகமாக சுழன்றதில் கயிறு திபாகர மாலிக் தலை மற்றும் முகத்தில் அடித்தது. இதில் அவர் மயங்கி விசைப்படகுக்குள் விழுந்தார். உடனே  திபாகர மாலிக்கை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் திபாகர மாலிக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  இது தொடர்பாக மரைன் இன்ஸ்பெக்டர் நவீன் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News