திருக்கோவிலுார் அருகே விபத்து தந்தை பலி: மகன் காயம்
திருக்கோவிலுார் அருகே விபத்து தந்தை பலி: மகன் காயம்.
Update: 2024-04-25 07:25 GMT
திருக்கோவிலுார் அருகே பைக் விபத்தில் தந்தை இறந்தார். மகன் படு காயமடைந்தார். திருக்கோவிலுார் அடுத்த செட்டிதாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி, 65. இவரது மகன் அரிபுத்திரன், 31. இருவரும் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாவுக்கு சென்று நேற்று காலை 5:15 மணிக்கு பைக்கில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். திருக்கோவிலுார் - மடப்பட்டு சாலையில், டி.குன்னத்துார் அருகே சென்றபோது நாய் குறுக்கிட்டதால் நிலை தடுமாறி விழுந்தனர். இதில் பைக்கில் பின்னால் உட்கார்ந்து வந்த சின்னத்தம்பி படு காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த அரிப்புத்திரன் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.