அரசு பேருந்தை முந்தும் போது விபத்து: வாலிபர் கால் முறிந்தது

வெள்ளிச்சந்தை அருகே அரசு பேருந்தை முந்தும் போது ஏற்பட்ட விபத்தில் வாலிபர் கால் முறிந்தது.

Update: 2024-06-21 14:38 GMT

காவல் நிலையம்

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே வெள்ளமோடியை  சேர்ந்தவர் தனசேகர் (55). கூலித் தொழிலாளி. இவரது மகன் அபினேஷ் (20 ) பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார்.    

   இவரது நண்பர் அஸ்வின் (19) ஐடிஐ படித்து விட்டு சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும்  முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி அஸ்வின், அபினேஷ் ஆகிய இரண்டு பேரும் பைக் ஒன்றில் புறப்பட்டு வெள்ளிச்சந்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.    

  பைக்கை அஸ்வின் ஓட்டினார்.  அபினேஷ் பின்னால் உட்கார்ந்து இருந்தார். பைக் ஈத்தன்காடு பகுதியில் செல்லும் போது, அஸ்வின் முன்னால் சென்ற அரசு பஸ்சை முந்தி செல்ல முயற்சித்துள்ளார். அப்போது எதிரே ஒரு பைக் வந்துள்ளது. உடனே அஸ்வின் திடீரென பிரேக் பிடித்துள்ளார்.      

 இதில் அபினேஷ் தூக்கி வீசப்பட்டு அருகில் உள்ள ஒரு பனை மரத்தில் மோதி கீழே விழுந்தார். இதில் அவருக்கு இரண்டு கால்களிலும் முறிவு ஏற்பட்டது. உடனே அந்த பகுதியினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அபினேசுக்கு கால்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் பைக்கை ஓட்டி சென்ற அஸ்வின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News