திருப்பூர் மாவட்டத்தில் வியாபாரிகள் 10ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் நடவடிக்கை

திருப்பூர் மாவட்டத்தில் வியாபாரிகள் 10ரூபாய் நாணயத்தை வாங்கமறுத்தால் நடவடிக்கை மாவட்டஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-12-13 15:38 GMT

10 ரூபாய் நாணயம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பூர் மாவட்டத்தில் கடை உரிமையாளர்கள் ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களின் புழக்கத்தில் 10 ரூபாய் நாணயங்கள் இருந்து வருகிறது. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் உள்ளது.

அது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை அளித்த போதும், 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற பொய்யான தகவல் பொதுமக்களிடையே பரவி வருகிறது. பல கிராமங்களில் உள்ள கடைகளில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதாக தகவல்கள் வருகின்றன. இவ்வாறு அரசு அங்கீகரித்த நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றமாகும். ரூ.10 நாணயம் செல்லாது என கூறுவதோ, அதனை பணப்பரிமாற்றத்தின் போது கொடுக்கவோ, வாங்கவோ மறுப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரூ.10 நாணயங்களை அவமதிக்கும் வகையில், நாணயத்தை வாங்க மறுக்கும் நபர் அல்லது கடையின் உரிமையாளர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

Tags:    

Similar News